1 முதல் 8 வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய ஆலோசனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
சென்னை :-
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து இன்று முக்கிய ஆலோசிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கொரோனா என்னும் பெருந்தொற்றின் காரணமாக பல கட்டுப்பாட்டுகளை எடுத்து வரும் சூழ்நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியிருந்து 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மாணவர்களும் ஆர்வமுடனும், ஒருசில மன உளைச்சலுடனும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று மாலை ஆலோசனை நடைபெறுகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் திறக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறார். அனைவரும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்பனவற்றை எல்லாம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்.
Leave a Reply