மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடிக்கிறார்
சென்னை :-
மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடிக்கிறார்.
காக்கா முட்டை படத்திற்கு தேசிய விருது பெற்ற மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் நடிகர் விஜய் சேதுபதி கடைசியாக விவசாயி, மாமனிதர், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, காத்து வாக்கில 2 காதல் ஆகிய படங்கள் இவர் கைவசம் உள்ளன. இதனைத்தொடர்ந்து மணிகண்டன் இயக்கத்தில் புதிய படத்தில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வீறுநடைபோடும் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மத்தில் மிகுந்த வரவேற்பு பெற்ற நடிகராக வளம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply