நமது கிராமம் நமது பாதுகாப்பு : பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சி.எம்.ஆர்.மணிமொழியன் DSP
”நமது கிராமம் நமது பாதுகாப்பு” : இந்தியாவிலேயே முதல்முறையாக கிராமங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டுமென பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது சொந்த பணத்தில் இருந்து 3 கிராமங்களுக்கு சிசிடிவி கேமராவை பொருத்துவதற்குத் தேவையான உபகரணங்கள் வழங்கியும், தனது முகாம் அலுவலகத்திலும் இரண்டு CCTV கேமராவைப் பொருத்தியும் ”நமது கிராமம் நமது பாதுகாப்பு” என்ற புதிய அறிவிப்பை தொடங்கி வைத்திருக்கிறார் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிஎம்ஆர். மணிமொழியன் அவர்கள்.
பொதுமக்கள் தானாக முன்வந்து, ஒன்று சேர்ந்து தங்கள் கிராமத்திற்கு கண்காணிப்பு கேமராவை வைத்து கிராமங்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கிராமங்களில் உள்ள வசதி படைத்தவர்கள் தங்களின் வீடுகளுக்கு கண்காணிப்பு கேமராவை பொருத்தும் போது கிராமங்களில் உள்ள தெருவுகளும் தெரியும்படி CCTV camera வை பொருத்தினால் மேலும் பாதுகாப்பை உருதிப்படுத்தலாம் என்றும் காவல் துணை கண்காணிப்பாளர் சிஎம்ஆர். மணிமொழியன் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் தன்வீடு, தான் வசிக்கும் தெரு மக்கள் மற்றும் கிராமம் பாதுகாக்கப்படும்.