கருத்துக் கணிப்பும் கருத்துத் திணிப்பும் ஒரு பார்வை

2026 தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?
வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பல நிறுவனங்களும் பார்வையற்றவர்கள் யானையைத் தொட்டுணர்ந்து அறிவது போல அவரவர் குழுக்களின் கருத்துத் திரட்டல்களைத் தொகுத்து பல விதமான யூகங்களை அளித்திருக்கின்றன.
அல்லது..அந்த நிறுவனங்கள் ஆதரிக்கும் கட்சிக்கு முன்னுரிமை கொடுத்து கருத்துருவாக்கம் செய்திருக்கின்றன.
இந்தக் கருத்துக் கணிப்புகளின் மீது சந்தேகம் கொண்டு யாராவது பொது நல வழக்கு எதுவும் போடப் போவதில்லை. அவர்கள் திரட்டிய கருத்துக்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்க அவசியமுமில்லை.
இந்தக் கருத்துக் கணிப்புகளின் படி பார்த்தால் திரு.ஸ்டாலின், திரு.எடப்பாடியார், திரு.விஜய் மூவருமே முதல்வராக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. ஏதாவது ஒரு நிறுவனம் நா.த.க – 164, தி.மு.க கூட்டணி – 27, அ.தி.மு.க கூட்டணி- 25, த.வெ.க – 16, மற்றவை – 2 என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டு திரு.சீமானையும் இந்த யூக விளையாட்டில் சேர்த்து அவரையும் சந்தோஷப் படுத்தியிருக்கலாம்.
அத்தனை கருத்துக் கணிப்புகளையும் அலசிப் பார்த்தால் முதல்வர் போட்டி திரு.ஸ்டாலின் மற்றும் திரு.எடப்பாடியார் இருவருக்கும் நடுவில்தான் என்று யோசிக்கலாம்.
அல்லது.. இருவருக்குமே ஆட்சி அமைக்க திரு.விஜயின் ஆதரவு தேவைப்படலாம் என்றும் யூகிக்கலாம்.
இந்த முறை இந்தத் தேர்தல் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் கிளைமாக்ஸ் போல பரபரப்பான திருப்பங்களுடன் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
அதெல்லாம் கிடையாது, நாங்கள்தான் மிக அதிக இடங்களைப் பிடித்து ஆட்சி அமைப்போம் என்று கட்சிக்காரர்கள் பின்னூட்டம் போடத் துவங்கலாம்.. ரெடி..ஸ்டார்ட்!
– பட்டுக்கோட்டை பிரபாகர்











Leave a Reply