கேள்வி – பதில் : “ஒழுக்கமாக இரு” எனும் வார்த்தை எனது பள்ளியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அப்படியென்றால் என்னவென்று தெளிவாக யாரும் சொல்வதில்லை. ஒழுக்கம் என்றால் என்ன?
கேள்வி : “ஒழுக்கமாக இரு” எனும் வார்த்தை எனது பள்ளியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால்
அப்படியென்றால் என்னவென்று தெளிவாக யாரும் சொல்வதில்லை. ஒழுக்கம் என்றால் என்ன?
- எஸ். சுரேஷ் கண்ணா, பதினொன்றாம் வகுப்பு
பதில்: பொதுவாக ஒழுக்கம்னா மத்தவங்களை முடிஞ்சவரை தொல்லை பண்ணாம, கஷ்டப்படுத்தாம நாமாக இருப்பது. ஆனால், ஒழுக்கம்ங்கறது வயசுக்கு ஏத்தமாதிரி, அவங்கவங்க செய்யற தொழிலுக்கு ஏத்தமாதிரி, பதவிக்கு ஏத்தமாதிரி மாறும். உதாரணத்துக்கு, வயசானவங்களால அவங்க வேலையை அவங்களே செஞ்சுக்க முடியாது. இன்னொருத்தரோட உதவி தேவைப்படும்.
- ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்
நீ இப்போ இருக்கும் வயசுக்கு எது ஒழுக்கம்? வகுப்பறையில் ஆசிரியர் பேசிக்கிட்டு இருக்கும்போது இடைஞ்சல் பண்ணாம இருக்கறது, school rules- அ மீறி நடந்துட்டு உன் பெற்றோரை ஆசிரியர் முன்னாடி தலைகுனிய வைக்காம இருக்கறது, உன் அப்பா அம்மா உன் நல்லதுக்காகனு எதச் சொல்றாங்களோ அதைப் புரிஞ்சு நடந்துக்கறது இதெல்லாம்தான் ஒழுக்கம்.
இதுவே நீ பெரியவனா வளர்ந்து இருக்கும்போது உன்னோட ஒழுக்கதிற்குண்டான வரையறைகள், நீ பின்பற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் மாறும். ரொம்பக் குழம்ப வேண்டாம் சுரேஷ்… உன்னைக் கஷ்டப்படுத்திக்காம அதேநேரம் முடிஞ்சவரைக்கும் மத்தவங்களுக்குத் தொல்லை தராம இருக்கறதுதான் உன்னோட இந்த வயசுக்குண்டான ஒழுக்கம். அதை புரிஞ்சுக முயற்சி பண்ணிட்டேனா உன்னால easy ஆ adopt பண்ணிக்க முடியும். வாழ்த்துக்கள் சுரேஷ்.
கேள்வி – பதில் தொடரும்…
……………………………………………………………………………………………………………………………………………
“எங்க ஏரியா… உள்ள வாங்க”
(இது குழந்தைகளுடன் ஓர் உரையாடல்)
இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ, குழந்தைகளாகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
Leave a Reply