தி.மு.க.கூட்டணியில் கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி காங்கரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதையொட்டி பட்டாசு வெடித்து நன்றி தெரிவிக்கப்பட்டது

Share Button
தி மு க கூட்டணியில் கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி காங்கரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டாசு வெடித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நடைப்பெற உள்ள 17 வது மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி திமுக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து  40 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது.
இதில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி ஒதுக்கப்படடுள்ளது.
இதனை அடுத்து கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ததையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் சேகர் தலைமையில் கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது.
அப்போது திமுக, காங்கிரஸ் கூட்டணியில் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்து ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக அமர வைக்க அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்காக உழைப்பது என வலியுறுத்தப்பட்து.
அப்போது வட்டாரத் தலைவர் விவேகானந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *