பொது அறிவை வளர்க்க மாணவர்கள் நூலகங்களை அதிகம் பயன்படுத்தி கொள்ளுங்கள் நூலகர் வேண்டுகோள்

Share Button

தேவகோட்டை : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பொது அறிவை வளர்க்கும் வகையில் நூலக களப்பயணம் சென்றனர்.              

பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் மாணவர்கள் தேவகோட்டையில் உள்ள பொது நூலகம் சென்றனர். நூலகர் ராதா மாணவர்களுக்கு நூலகத்தின் பல்வேறு பகுதிகளை அறிமுகம் செய்தார். நூலக உறுப்பினர் அட்டை பெறுவது எப்படி என்பதையும் விளக்கினார்.

தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி அதிக அளவில் ஊர்புற நூலகங்களை திறந்துள்ளது. நூலகங்களில் அரியவகை புத்தகங்கள் அதிக அளவில் உள்ளன. இதனை மாணவர்கள் பயன்படுத்தி அறிவை பெருக்கி கொள்ள வேண்டும் என்று பேசினார். பள்ளி ஆசிரியர்கள் கருப்பையா, செல்வமீனாள் மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பொது நூலகத்தை அறிமுகப்படுத்தி நூலக செயல்பாடுகளை நூலகர் ராதா விளக்கி கூறினார்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.