திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி பள்ளிக் கட்டிடத்தைச் சுற்றி பொது மக்கள் ஆக்கிரமிப்பு : துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?

Share Button
திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி பள்ளிக் கட்டிடத்தைச் சுற்றி முற்றிலும் பொது மக்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள் இதைச் சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா…?
இந்த அங்கன்வாடி பள்ளி கட்டிடமானது 1 வது மண்டலத்திற்கு உட்பட்ட 2 வது வார்டு ல் உள்ளது இந்த பள்ளி மழலை குழந்தைகளின் நலனுக்காகவும் இப்பள்ளி வளாகத்தை நம் பொது மக்களாகிய நாமலே தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டிய பள்ளியை…தற்போது நாமலே பெரிதும் ஆக்கிரமித்து வருகிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும் போது இப்பள்ளியின் வளர்ச்சி பற்றி என்ன நினைப்பது?
மேலும் தன் வீட்டைப் போலவும் இப்பள்ளி வளாகத்தை தூய்மை படுத்தி வைக்க இப்பள்ளி சார்ந்த முக்கியஸ்த்தர்கள் நேரில் சென்று இங்குள்ள ஆக்கிரமைப்பின் பொருட்கள் பற்றிய விபரம்…பள்ளி கேட் முன் ஒரு தனி நபர் ஓடுகளை அடுக்கி வைத்திருப்பது, மற்றருவர் துணி காயப் போடும் கம்பிகள் நட்டும், இன்னொருவர் பழைய சைக்கிளை நிறுத்தியும், பள்ளி பின்புரம் அதீத சிமெண்ட் சிலாப்பும், கருங்கல்லும், பழைய மரச்சாமான்களுமே போட்டு பள்ளியைச் சுற்றி மிகவும் அச்சுறுத்தும் அளவிற்கு குமிக்கப்பட்டும் இதில் மாநகராட்சிக்குட்பட்ட பயன் பாட்டில் இல்லாத வாட்டர் டேங்  இவைகளும் இப்படி பலவிதமான பொருட்களை இந்த அங்கன்வாடி பள்ளி கட்டிடம் முன்பு போடப்பட்டு ஆக்கிரமித்து உள்ளதை நினைத்து பார்க்கும் போது மிகவும் வேதனைக்குள்ளான  விசயமாக இது பல மாதங்களாக இங்கு நீடித்து வருகிறது.
இதை கண்டும் காணததுமாக மாநகராட்சி நிர்வாகமும் அதை சார்ந்த அதிகாரிகளுமே. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.
நம் மழலை குழந்தைகளின் நலன் கருதி எதிர் வரும் கோடை விடுமுறை நாட்கள் முடிவடைவதற்குள்ளாவது ஆக்கரமிப்பை அகற்றி விட்டு பள்ளி வளாகத்தை புதுப்பித்து மழலைகளின் எண்ணிக்கையை அதிகரித்து நல்ல ஆரோக்கியமான இடத்தை சுத்தப்படுத்தி குழந்தைகளின் நலன் காக்க இது சார்ந்த அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் சமூக ஆர்வலர் ந.தெய்வராஜ்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *