மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அறிவுரைப்படி பிரசாரத்திற்கு செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
விஜயகாந்திற்கு பேச்சு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது, அவர் விரைவில் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளதாக அவரது மனைவி பிரேமலதா, மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் கூறி வந்தனர்.
இந்நிலையில் தேர்தல் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள விஜயகாந்த், நான் நலமான இருக்கிறேன், கூடிய விரைவில் பிரச்சாரத்தில் பங்கேற்பேன் என கூறியுள்ளார். மருத்துவர்கள் அறிவுரைப்படிதான் பிரசாரத்திற்கு வர முடியும். வரும் தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெற உள்ளது. அதில் தர்மம் தான் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடி நல்லவர் மீண்டும் அவரே பிரதமராக வர வேண்டும். தமது கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தொண்டர்கள் உழைக்க வேண்டும் என விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
Leave a Reply