ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 வீரர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் உதாம்பூர் பகுதியில் 3 துணை ராணுவப் படை வீரர்களை சக வீரர் ஒருவரே சுட்டுக் கொன்றுள்ளார்.
பட்டால் பாலியா ராணுவ முகாமில் நேற்று இரவு துணை ராணுவப் படை வீரர்கள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின் போது ஆத்திரமடைந்த அஜித்குமார் என்ற வீரர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் போக்ராமால், யோகேந்திர சர்மா, உமேத் சிங் ஆகிய 3 துணை ராணுவப் படை வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் தன்னை தானே அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார். இதனால் பலத்த காயத்துடன் அவர் உதாம்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply