கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருவதால், ஊத்தங்கரை ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை கேட்டு காலி குடங்களுடன் திமுக சார்பாக ஆர்பாட்டம்

Share Button
கிருஷ்ணகிரி : ஊத்தங்கரை ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை கேட்டு காலி குடங்களுடன் திமுக சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்திற்குட்பட்ட 34 ஊராட்சிகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. கிராம மக்கள் குடி தண்ணிருக்காக அல்லல்பட்டு வருகின்றனர்.
மேலும் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணி வழங்க வேண்டியும், நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரியும் ஊத்தங்கரை வட்டார வளர்சி அலுவலகம் அருகில் பெண்கள் காலி குடங்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மூன்றாம்பட்டி ஊராட்சியில் உள்ள தளபதி நகருக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மறுக்கும் அதிமுக அரசையும், அதிகாரிகளையும் கண்டித்து ஊத்தங்கரை வடக்கு, தெற்கு ஒன்றிய திமுக சார்பாக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் MLA தலைமையில் ஆர்பாட்டம்  நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதியழகன், மாவட்ட துணை செயலாளர் சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், சாமிநாதன், பேரூர் கழக செயலாளர் பாபுசிவகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரஜினிசெல்வம் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *