கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம், நெடுங்கல் கொட்டாவூர் அசோக் மிஷன் பள்ளியின் 8 ஆம்ஆண்டு, ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் மற்றும் அசோக் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் கே.பி.அருள் தலைமை தாங்கினார். பள்ளியின் நிருவனர் அசோக் ஆண்டு அறிக்கை வாசித்தார்.
முதல்வர் கே.பி.அன்பரசு வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பெரியார் பல்கலை கழக துணைவேந்தர் டாக்டர் பி.குழந்தைவேல், பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி மையத்தின் தலைவர் எ.ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும் சிறப்பாக பணியற்றிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு, ஊக்கப்பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
Leave a Reply