கிருட்டினகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் மூலம் நாட்டு துவரை அமோக விளைச்சல். துவரை சாகுபடியில் இரட்டிப்பு வருவாய் கிடைப்பதாக துவரை விவசாயிகள் மகிழ்ச்சி.
கிருட்டினகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு விவசாயிகள் மானாவரி பயிர்களின் ஒன்றான துவரை அதிக அளவில் நாட்டு சாகுபடி செய்து உள்ளனர்.
இதில் ஊத்தங்கரை, மத்தூர், போச்சம்பள்ளி, சிவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ஆண்டு விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் ஊடுப் பயிராக துவரை சாகுபடி செய்து உள்ளனர்.
ரசாயன உரங்களை தவிர்த்து உள்ள விவசாயிகள் இலை தலை, மாட்டு எரு போன்ற இயற்கை உரங்களைக் கொண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள துவரைச் செடிகள் அமோக விளைச்சல் கண்டுள்ளதால் நாட்டுத்துவரைச் சாகுபடி விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
மேலும் நாட்டு துவரை சாகுபடியில் இந்த ஆண்டு அதிக மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊத்தங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் நிலக்கடலை சாகுபடியில் ஊடுபயிராக துவரை சாகுபடி செய்யப்பட்டது.
இயற்கை உரம் முலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள இந்த துவரையில் எதிர்பார்த்தபடி மகசூல் அதிகரித்து உள்ளது இதனால் இந்த ஆண்டு நாட்டு துவரைச் செடியில் இரட்டிப்பு வருவாய்க் கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
Leave a Reply