கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சார்பு நீதிபதி வி.பி.சுகந்தி அவர்கள் தலைமை தாங்கினார். பாலிடெக்னிக் முதல்வர் எப்சிபா ஏஞ்சலா, வட்டார கல்வி அலுவலர் ஜி.மதேஸ்வரி, அதியமான் மகளிர் கல்வியியல் கல்லூரி சார்பாக அபிநயா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
வழக்கறிஞர் த.பிரபாவதி அனைவரையும் வரவேற்றார். மகளிர் தினத்தை முன்னிட்டு துப்புறவுப் பணியாளர்களுக்கு நல உதவிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பெண்களுக்கு நல உதவிகள், மாற்றுத்திறனாளிகளின் அம்மாவை பாராட்டு நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் அரசுப்பள்ளி தலைமையாசிரியைகள் அமுதசெல்வி, தாசூன், கௌரம்மாள், முருகன், ஆசிரியர் சக்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் நித்யா, ஜெயந்தி, வசந்தகுமாரி, கவியரசி, பிந்து, மாணவர்களின் நல விரும்பிகள் உமா மகேஸ்வரி, சாந்தி, கெஜலட்சுமி, சிக்னல் சரஸ்வதி, அஞ்சலி, ஜான்சி, ஆசிரியை கவிதா, யோகா வித்யா, அரசு மருத்துவமனை காயத்திரி மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர், பல்வேறு பள்ளி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
முன்னதாக சமுதாயத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் ஆசிரியை ச.உமா, ரத்த பரிசோதனை நிலைய உமா சக்தி, பரதநாட்டிய ஆசிரியை வீரலட்சுமி, சாந்தி, மா.ரோஜா ஆகியோரை பாராட்டி நம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது.
துப்புரவு பணியாளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களை ஆர்.எல்.ஆர். கேஸ் உரிமையாளர் ஜெ.லதா வழங்கினார். இறுதியாக மாணவிகளின் யோகா நிகழ்ச்சி, கவிதை வாசிப்பு, பாடல் பாடுதல் போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் த.பிரபாவதி மற்றும் ஜே.ஆர்.சி. ஆசிரியர் கு.கணேசன் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் நீதித்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை, வருவாய்துறை, மின்சார வாரியம், பேருராட்சி, கல்லூரி, தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply