கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை, புளியின் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த குளிர்பதன கிடங்கு அமைக்க தமிழக அரசு முன் வரவேண்டும் என புளி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஆண்டுத்தோறும் அதிக அளவில் புளி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் புளி தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கிருஷ்ணகிரி, பேரிகை, உரிகம், இராயக்கோட்டை, ஆலப்பட்டி என மாவட்டம் முழுவதும் புளியின் விளைச்சல் அதிகரித்துள்ளது.
தற்போது அறுவடைக்கு தயாரான புளிகளை விவசாயிகள் அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புளி விளைச்சல் அதிகரித்து உள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து இருப்பதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது, இதில் கூலி உயர்வு, வாகன கட்டணம் உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தினை ஏற்படுத்தி உள்ளது .
ஆகையால் புளி விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலைக் கிடைக்க இராயக்கோட்டைப் பகுதியில் குளிர்பான கிடங்குகள் அமைத்து இனிவரும் காலங்களிலாவது புளி விவசாயிகளை அரசு காப்பாற்ற முன்வர வேண்டும் என புளி விவசாயிகள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.
Leave a Reply