கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சுமார் நான்கு கோடி மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி கட்டிடம் மற்றும் புதிய தாலுகா அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை தலைமை இடமாகக் கொண்டு கடந்த 2015 ல் தனி தாலுக்காவாக உருவாக்கப்பட்டது ஆனால் போதிய கட்டிட வசதி இல்லாதால் அரசு பயனியர் மாளிகையில் இயங்கி வந்தது.
இந்த நிலையில் பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு என தனி கட்டிடம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து பர்கூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 2 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாலுக்கா அலுவலகம் மற்றும் அரசு குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துக் கொண்ட பர்கூர் சட்ட மன்ற உறுப்பினர் இராஜேந்திரன் அவர்கள் புதிய தாலுக்கா அலுவலகம் கட்டுவதற்கான பணியினை பூமி பூஜைகள் செய்து துவக்கி வைத்தார்.
இதே போல பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜிஞ்சம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊரட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் ஒரு கோடியே 36 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பணிகளையும் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றியச் செயலாளர் ஜெயபால், முன்னாள் மாநிலங்கவை உறுப்பினர் பெருமாள், மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் மாதையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply