இன்று உழவர்திருநாளை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா கிருட்டினகிரி நகரம், அவதானபட்டி சிறுவர் பூங்காவில் வெகு சிறப்பாக நடை பெற்றது.
இவ்விழாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டார்கள். இவர்களுக்கு கோலப்போட்டி, இசை நாற்காலி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மருதம் கலைகுழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த இனிய விழாவிற்கு தொழிலதிபர் திரு ஜே.ஆர் வேங்கிடபதி, ஓட்டல் தமிழ்நாடும் மேலாளர், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் திரு கோவிந்தராஜ் அவர்கள், மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு து.உமாசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Leave a Reply