என்றும் இளமையோடு வாழ! நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே

Share Button

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் இயற்கையையே ஆதாரமாகக் கொண்டு எந்த விதமான மாற்று உணவு முறைகளையோ, மருந்துகளையோ, மருத்துவர்களையோ நாடாமல் நோயின்றி வாழ்கின்றன.

ஆனால் மனிதன் மட்டுமே உடலுக்கு தேவையானவற்றை உண்ணாமல் வாய்க்கு ருசியானவைகளை உண்டு, உடலுழைப்பு இல்லாமல், உடல் நலத்தை கெடுத்துக்கொண்டு தானும் அவதிப்பட்டு அடுத்தவரையும் அவதிக்கு உள்ளாக்கி இயற்கைக்கு எதிராக நோய்நொடியுடன் காலம் கழிக்கிறான்.

இயற்கை வாழ்க்கை முறையை விடுத்து மற்ற மருத்துவ முறைகளை பின் பற்றுவதால் நாட்டில் நாளுக்கு நாள் நோய்கள் அதிகமாகின்றன. ஒரு நோயை குணபடுத்த மருந்து உண்டால் பல புது நோய்கள் வருகின்றன.

குறைந்தபட்ச ஆரோக்கியம் கூட இன்றைய நிலையில் மனிதனுக்கு எட்டாக் கனியாகிவிட்டது.
இயற்கைக்கு எதிராக செயல்பட்டதால் இயற்கை நமக்கு விதித்த தண்டனைகள் ஏராளம். இந்த தண்டனையிலிருந்து விடுபட இயற்கை வாழ்க்கை முறையை நம்பி சரணடைவதே சிறந்த வழியாகும்.

கடந்தவை கடந்தவைகளாகவே இருக்கட்டும். இனி வரும் காலங்களிலாவது நோய்கள் இல்லாமல் வாழ கீழ் காணும் மருத்துவ குணமுள்ள சாறுகளை உட்கொண்டு ஆரோக்கிய வாழ்க்கை வாழலாம்.

1. நெல்லிக்காய் சாறு,
2. வில்வ இலை சாறு,
3. அருகம்புல் சாறு,
4. புதினா (அ) கறி வேப்பிலை சாறு,
5. வெண்பூசணி (அ) வாழைத்தண்டு சாறு,
6. கொத்துமல்லி சாறுடன் எலுமிச்சை சாறு.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சாறுகளில் ஒன்றை தினமும் மாற்றி மாற்றி குடிக்கலாம்.
கட்டாயம் வெறும் வயிற்றில் மட்டுமே குடிக்க வேண்டும். குடித்து விட்டு ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம்.

வில்வ இலை சாறு மற்றும் அருகம்புல் சாறு மட்டும் மாதத்திற்கு ஒரு முறை அருந்தினால் போதுமானது.

இந்த சாறு வகைகளை ஒரு வாரம் குடித்து பார்த்தாலே உடலில் பல மாற்றங்களை உணரலாம்.

அதிக உடல்எடை, மூட்டுகளில் வலி மற்றும் தேய்மானம், கண்பார்வை குறைபாடுகள், நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம், கருப்பை பிரச்சினைகள், நரம்பு சம்பந்தமான உபாதைகள், இரத்த சோகை, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் மருந்துகள் இல்லாமலே படிப்படியாக குணமாகும்.

இனியாவது விழித்துக்கொண்டு நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே, நம் வீட்டிலேயே இருக்கிறது என்று அறிந்து கொண்டு மாற்றத்தை நோக்கி பயணிப்போம்.

என்றும் நலம்வாழ…

 

 

 

 

 

 

 

 

 

ஈஸ்வரி

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

One response to “என்றும் இளமையோடு வாழ! நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே”

  1. Oshonicraj says:

    நன்றி. நல்ல தகவல். எனக்கு பயன்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *