கிருஷ்ணகிரி அருகே நாரலப்பள்ளி பஞ்சாயத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த, கிராமப்புர சமூக நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் வீடு, வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கி, கொசு மருந்தும் அடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாராலப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மகாராஜகடை, மாட்டுஓணி, ஏக்கல் நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கை – கால், மூட்டு வலி, உடல் சேர்வு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சாலால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட நாரலப்பள்ளி பஞ்சாயத்து அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்களுக்கு உதவுகின்ற வகையில், கிராமப்புற சமூக நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்களுக்கு வீடு, வீடாக சென்று டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இதே போல பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் நிலவேம்பு கசாயத்தினை வழங்கி சுற்றுபுறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மேலும் நாரலப்பள்ளிக்கு உட்பட்ட பகுதியில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த வீடுகள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டு மக்கள் மத்தியில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், கிராமப்புற சமூக நலவாழ்வு அறக்கட்டளையை சேர்ந்த பலர் கலந்துக்கொண்டனர்.












Leave a Reply