சுட்டெரிக்கும் கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் தொட்டிகளில் நீர் வைத்து தாகம் தணிக்கும் குடும்பத்தினர்!
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் தண்ணீரை தேடி அலையும் தெரு நாய்களுக்கும், பறவைகளுக்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் தொட்டிகளில் நீர் வைத்து தாகம் தணிக்கும் குடும்பத்தினர்!
“உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல மனிதரை சுற்றியுள்ள உயிரினங்களுக்கும் ஆனது தான்”
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா உள்ளிட்டோர் சுட்டெரிக்கும் கோடை வெயிலால் தண்ணீரை தேடி அலையும் தெரு நாய்களுக்கும், பறவைகளுக்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் தொட்டிகளில் தாகம் தணிக்கும் வகையில் நான்கு தொட்டிகள்
அமைத்து நீர் நிரப்பி தாகம் தனித்து வருகின்றனர்.
இதுகுறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், காலநிலை மாற்றத்தால் வருடா வருடம் கோடையின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.
இந்த ஆண்டும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. மனிதர்களாலே இந்த வெயிலை தாங்க முடியவில்லை.
பருவகால மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்கள் தங்களுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
தற்போது கோடை காலத்தில் அதிக வெப்பம் பூமியை தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்து காத்துக்கொள்வதற்கு பல்வேறு யுக்திகளை அரசுகள் செய்து வருகின்றன. இந்த காலக்கட்டத்தில் பறவைகள், விலங்குகள் வாழும் பகுதிகளையும், நீர்நிலைகளையும் மனிதர்கள் ஆக்கிரமித்து கொண்டதால் பல்வேறு விதங்களில் விலங்குகளும், பறவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது விலங்குகள், பறவைகள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் தேடி அலையும் நிலை உருவாகியுள்ளது.
கோடை காலத்தில் வறண்ட நிலை நிலவும்போது உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அலைகின்றன. மனிதர்களான நாம் நம்மை காத்துக்கொள்வது போல் நகர்ப்புறங்களில் தெருவோர நாய்கள், ஆடு, மாடுகள், பூனை உள்ளிட்ட கால்நடைகளும், உள்ளூர் குருவியான காகம், மைனா, சிட்டுக்குருவி உள்ளிட்டவைகளுக்கு தாகம் தணிக்க வீட்டின் முன் புறம் நான்கு சிமெண்ட் தொட்டி வைத்து அதில் குடிக்க குடிநீரும் உண்ண உணவும் வழங்கி வருகிறோம்.
உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல மனிதரை சுற்றியுள்ள உயிரினங்களுக்கும் ஆனது தான். எனவே கால சூழல் கருதி பிற உயிரினங்களிடமும் மனித நேயத்துடன் நாம் அணுக வேண்டும் என்றார்.
Leave a Reply