தவாக வேல்முருகனுடன் கைக்கோர்த்த தமக புலியேந்திரன்

Share Button

அரக்கோணம் :-

தவாக வேல்முருகனுடன் கைக்கோர்த்த தமக புலியேந்திரன்

2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி என்ற நிலையிருந்தது. ஆனால், தற்போது தவாக வேல்முருகன் தலைமையில் ஒரு கூட்டணி உருவாகியுள்ளது. எனவே, தற்போது ஐந்துமுனை போட்டியாக களம் மாறியுள்ளது. இக்கூட்டணியில் 15 க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளார் வேல்முருகன் அவர்கள்.

2026 சட்டசபை தேர்தலில் எல்லோரும் திரும்பி பார்க்கின்ற வகையில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தவே, பல்வேறு கட்சிகளுடன் ஒரு வலுவான கூட்டணி அமைத்துள்ளோம் என்கிறார் தவாக வேல்முருகன்.

நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் எங்களுடைய கூட்டணி களத்தில் வீரியமாக செயல்பட்டு வெற்றி பெறுவோம் என்றும் அசைக்கமுடியாத நம்பிக்கையோடு செயலாற்றுகிறோம் என்று கூறுகிறார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழின போராளி அண்ணன் திருமிகு தி.வேல்முருகன் MLA அவர்களின் தலைமையில் அமைந்திருக்கும் வெற்றி கூட்டணியில் இடம் பிடித்திருக்கும் தமிழக மக்கள் கட்சிக்கு நான்கு சட்டமன்ற தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்களின் விவரம் வருமாறு.

(1) சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தலைமை அமைப்பு செயலாளர் திரு Dr.K.ராமகிருஷ்ணன் MBBS MD., அவர்களும்,

(2) குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.Er. D.ராஜு அவர்களும்,

(3) கே வி குப்பம் சட்டமன்ற தொகுதியில் வேலூர் மாவட்ட செயலாளர் திரு.M.ராஜா Ex-Army அவர்களும்

(4) சீர்காழி சட்டமன்ற தொகுதியில் மாநில பொறுப்பாளர் திரு.K.பெத்த பெருமாள் Ex-Army அவர்களும் போட்டியிடுகிறார்கள்.

மேலும், தமிழக மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் கேமரா சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *