Eco-Clean திட்டத்தை, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நகராட்சிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும்!

Share Button

அரக்கோணம் :-

Eco-Clean திட்டத்தை, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நகராட்சிகளில் நடைமுறைப்படுத்தும் நோக்கில், அரக்கோணம் நகராட்சி ஆணையர் அவர்களின் முன்னிலையில் விளக்கமாக சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த முயற்சி மூலம் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சரியான குப்பை அகற்றும் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மாணவர்கள் பங்கேற்பு 

இன்று St. Peter’s College மாணவர்களுடன் இணைந்து நம் சமுதாயத்திற்கு நல்ல மாற்றத்தை கொண்டு வரக்கூடிய ஒரு சிறந்த யோசனையை பற்றி பேச இருக்கிறோம் அதுதான் Eco-Clean Proposal.

சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது அரசு அல்லது நகராட்சி ஊழியர்களின் பொறுப்பு மட்டும் அல்ல ; அது ஒவ்வொரு மனிதரின் சமூகப் பொறுப்பு.

சமூக நலன் காக்க

நாம் சாலைகளில் அல்லது வளாகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் அல்லது குப்பைகள் விழுந்திருப்பதை பார்க்கும்போது பலர் அதை புறக்கணித்து சென்று விடுகிறோம்.

ஆனால் ஒவ்வொரு மாணவரும் சிறிய பொறுப்பை எடுத்தால், நமது கல்லூரி வளாகமும், நகரமும் மிகவும் சுத்தமாக மாறும்.

QR CODE முறை

இந்த Eco-Clean திட்டத்தில் QR Code பயன்படுத்தப்படுகிறது. கல்லூரி வளாகத்தில் சில இடங்களில் QR Code வைக்கப்படும். மாணவர்கள் அந்த QR Code-ஐ scan செய்து, அருகில் இருக்கும் குப்பைகளை எடுத்துக் கொண்டு சரியான dustbin-இல் போட வேண்டும்.
அந்த நேரத்தில் மாணவர்கள் selfie எடுத்து Google Form மூலம் upload செய்யலாம்.

அதனால் அவர்கள் செய்த நல்ல செயல் பதிவு செய்யப்படும்.
இந்த நல்ல செயலை ஊக்கப்படுத்த, கல்லூரி மாணவர்களுக்கு credits, appreciation அல்லது certificate வழங்கலாம்.

இது மாணவர்களுக்கு ஒரு நல்ல பழக்கத்தையும், சமூக பொறுப்பையும் உருவாக்கும்.
இந்த திட்டம் கல்லூரி வளாகம் மட்டும் அல்லாமல் பள்ளிகள், பொதுமக்கள் இடங்கள் மற்றும் நகராட்சி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டால், சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

புதிய முயற்சி 

இந்த முயற்சி United Nations Sustainable Development Goals (SDGs)-க்கு உட்பட்டது. குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுத்தமான நகரங்கள் உருவாக்குவதற்கு உதவும்.
அன்பான மாணவர்களே,
சிறிய செயல்கள் கூட பெரிய மாற்றங்களை உருவாக்கலாம்..

நாம் அனைவரும் சேர்ந்து செயல்பட்டால், நமது சமுதாயத்தை சுத்தமான மற்றும் பசுமையான சூழலாக மாற்ற முடியும் என்று சமூக ஆர்வலர் Dr.J.Suganthi Vinodhini
B.E.,M.E.,Ph.D.,B.Ed.,M.Ed.,M.A(Yoga).,M.A(journalism)., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *