ரபேல் தீர்ப்பின் மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ரபேல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு செய்த முறைகேடுகளை கடந்த சில வாரங்களுக்கு முன் தி இந்து பத்திரிக்கையில் பத்திரிக்கையாளர் என்.ராம் எழுதி இருந்தார்.
இதில் அவர் முக்கிய ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார். இந்த ஆதாரங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் திருடப்பட்ட, கசிந்த ஆவணமாக இருந்தாலும் கூட, அதை கருத்தில் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில்தான் இந்த ஆவணங்கள் விசாரிக்கப்படுமா என்று இன்று உத்தரவு வழங்கப்பட உள்ளது. ரபேல் தொடர்பாக கசிந்த ஆவணங்களை விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கும்.
Leave a Reply