மநீம கட்சியில் இருந்து மூகாம்பிகா ரத்தினம் விலகி தவெகவில் இணைந்தார்!

Share Button

பொள்ளாச்சி :-

மநீம கட்சியில் இருந்து மூகாம்பிகா ரத்தினம் விலகி தவெகவில் இணைந்தார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தலைமையில் செயல்படும் தமிழக வெற்றிக் கழகத்தில் பொது செயலாளர் மாண்புமிகு அமைச்சர் திரு. நா. ஆனந்த் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்களின் ஆசீர்வாதத்துடன், மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்த மூகாம்பிகா ரத்தினம் அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கட்சியில் இணைந்தது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

என்றும் எங்கும் எப்போதும் சமூக நீதியை நிலைநாட்ட ; மகளிர் மேம்பாட்டிற்காகவும், பொது நலத்திற்காகவும் நடுநிலமையோடு செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாண்புமிகு அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்களிடம் ஆசி பெற்றதாக மூகாம்பிகா ரத்தினம் தெரிவித்துள்ளார்.

மூகாம்பிகா ரத்தினத்தின் இந்த புதிய அரசியல் பயணம் தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி மற்றும் களப்பணிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

மேலும், மாற்றுக் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகள், Ex MLA க்கள், Ex MP க்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் தொடர்ந்து பலபேர் இணைந்து வருகிறார்கள் என்பது குறியிடத்தக்கது.

@puthuvaravunews

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *