தமிழ் மொழியினையும் தமிழ்க் கலாச்சாரத்தினையும் காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை
நெல்லை :-
உலகத் தாய்மொழி நாளையொட்டி பிப்ரவரி 21, 2022 அன்று மாலை 6.00 மணிக்கு இணையவழியில் பன்னாட்டுக் கவியரங்க நிகழ்ச்சி பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில், துபாயில் இருந்து கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஆ.முகமது முகைதீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
முனைவர் ஆ.முகமது முகைதீன் பேசுகையில் :
உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக தமிழ் விளங்குகிறது என்று தமிழ் சிறப்பினை எடுத்துக் கூறி தனது உரையினைத் தொடங்கினார்.
தமிழ்மொழியின் பெருமைகளையும், இலக்கியச் சுவையினையும் நமது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் தமிழைப் போற்ற வேண்டியது நமது கடமை என்றும் எடுத்துக்கூறினார் முனைவர் ஆ.முகமது முகைதீன் அவர்கள்.
தமிழ் மொழியினையும், தமிழ்க் கலாச்சாரத்தினையும் காத்திட வேண்டும் என குறிப்பிட்டு பேசினார்.
நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தொடக்கவுரையாற்றி கவியரைங்கித்தினைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா என்ற பே.இராஜேந்திரன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
இன்பத் தமிழைப் போற்றுவோம்… என்ற பொதுத் தலைப்பில் நடைபெற்ற இந்தக் கவியரங்கில், ஜெர்மனி நாட்டிலிருந்து கவிஞர் ஜோசபின் ரம்யா இதயமாய் என்ற துணைத் தலைப்பிலும், உயர்வாய் என்ற துணைத் தலைப்பிலும் பேசினார்.
தமிழ்நாடு கூடலூரைச் சேர்ந்த கவிஞர்.கு.நிருபன் குமாரும் இமயமாய் என தருமபுரி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நா.நாகராஜ் ஆகியோர் கவிதை வாசித்தார்கள். தொடர்ந்து கவிதைக் கணேசன் நிறைவுக் கவிதை வாசித்தார்.
மகாகவி பாரதியின் கொள்ளுப் பேத்தி கவிஞர் உமா பாரதி வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருச்சியிலிருந்து கவிஞர் செல்வராணி, திருப்பூரிலிருந்து சண்முக சுந்தரம், ஈரோடு க.தாமோதரன், முனைவர் ச.ஆ.பழனிச்சாமி, பாளையங்கோட்டை பாக்கியலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா செய்திருந்தார்.
தமிழ் மொழியினையும் தமிழ்க் கலாச்சாரத்தினையும் காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை ஆகும்.
Leave a Reply