எத்தனை சவால்கள் எத்தனை ஏமாற்றங்கள் எத்தனை துரோகங்கள் அத்தனையையும் கடந்து!
அனைவருக்கும் அன்பான வணக்கம்! நான் உங்கள் டி. அருளானந்து…
உள்ளார்ந்த அன்போடு இந்த பதிவை பதிவிடுகின்றேன். வருடத்தில் பல முக்கிய நிகழ்வுகள் முக்கிய திருவிழாக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் பொதுவாக அதற்கு என்று சிறப்பு வாழ்த்துக்கள் சொல்வதில்லை. ஆனால் இந்த நேரத்தில் இந்த பதிவின் மூலம் என் எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
எத்தனை சவால்கள், எத்தனை ஏமாற்றங்கள், எத்தனை துரோகங்கள் அத்தனையையும் வார்த்தையால் சொல்லிவவிட முடியாது. எல்லாவற்றையும் கடந்து, இன்று மாபெரும் வெற்றி பெற்று நதி போல் ஓடிக்கொண்டிரு என்பதற்கு உதாரணமாக என் பயணம் இருக்கிறது.
நான் அடிக்கடி சொல்லும் வாசகங்களான… வாழு! வாழவை! வாழ வழிவகுத்துக்கொடு! வாழ விடு! என்ற என் கொள்கைக்கு ஏற்ப உளப்பூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.
எதையும் நம்பிக்கை மேல் நம்பிக்கை வைத்து செய்யுங்கள் என்று அடிக்கடி அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன். அவநம்பிக்கையோடு எதையும் செய்யாதீர்கள் என்பது என் கொள்கை.
கடந்த காலங்களில் எவ்வளவு சவால்களை நீங்கள் அனுபவித்து இருந்தாலும், எல்லாம் மாறும் எல்லாம் சீராகும் என்று நம்பிக்கையோடு அனைத்து தேவையில்லாத விஷயங்களும் போகியோடு முடிந்து போகட்டும். இன்று புதிதாய் பிறந்தேன் என்ற எண்ணத்தோடு புதிய பயணத்தை தொடங்குவோம்.
அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சொல்வதில் மனம் மகிழ்கிறேன் “தை பிறந்தால் நல்ல வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையோடு நல்லது நடக்க ஆண்டவனை வேண்டுகின்றேன்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பேரன்புடன்,
டி. அருளானந்து
சேர்மன் விஷன் குரூப், சென்னை.
Leave a Reply