பொள்ளாச்சி போராட்டம் எதிரொலி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நேற்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது, மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலிசாருக்கும், மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பல மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Leave a Reply