இளைஞர்களின் ஓட்டு போடும் ஆர்வம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து டுவிட்டரில் ‘பவர் ஆப் 18’ என்ற பெயரில் கருத்து கேட்கப்பட்டது. அதில், 98 சதவீதம் பேர் ஓட்டு போடுவோம் என்று கூறி உள்ளனர்.
ஜனவரி மாதம் 31-ந் தேதி முடிய வாக்காளர் பட்டியலில் ஆட்கள் சேர்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில், 18 வயதில் இருந்து 19 வயதுடைய முதல் முறை வாக்காளர்கள் 8 லட்சத்து 98 ஆயிரம் பேர் இடம்பெற்றுள்ளனர்.
இது சம்பந்தமாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறும்போது, தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் சேர்க்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஏராளமான இளைஞர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர். வாக்காளர்களிடம் ஓட்டு போடும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளையும், பிரசாரங்களையும் மேற்கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்.
2016 சட்டசபை தேர்தலின்போது, சமூக வலைத்தளங்களில் மீம்ஸ், வீடியோக்கள் போன்றவற்றை அதிகமாக வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதேபோல் இப்போதும் பிரசாரம் செய்யப்பட உள்ளது.
வாக்காளர்கள் ஓட்டு போடும் அவசியத்தை வற்புறுத்தும் வகையில் ரஜினிகாந்த உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வேண்டுகோள் விடுக்கும் விழிப்புணர்வு வாசகங்களையும் வெளியிட உள்ளனர்.
Leave a Reply