நாடு முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1,354 கோடி மதிப்பிலான பணம், நகைகள் மற்றும் பொருட்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரைக்கும் ரூ.185.38 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 2 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற முன்னர் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தலைமை தேர்தல் ஆணையர் அரோரா மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் தமிழகம் வர உள்ளனர்.
ஏப்ரல் 2ஆம் தேதி மாலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். ஏப்ரல் 3ஆம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையர்கள் வருவதால், தமிழக தேர்தல் பணிகள் மேலும் சுறுசுறுப்பு அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் பணப்பட்டுவாடா தொடர்பாக 833 புகார்கள் வந்துள்ளதாகவும் 37 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply