கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சார்பு, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சமரச விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சார்பு நீதி மன்ற நீதிபதி வி.பி.சுகந்தி அவர்கள் தலைமை வகித்தார்.
குற்றவியல் நடுவர் டி.ராஜேஷ்ராஜூ, உரிமையியல் நீதிபதி சி.ராஜசேகர், ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் பி.நடராஜன், வழக்குரைஞர் சங்க தலைவர் சந்திரசேகர், மூத்த வழக்குரைஞர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள், உச்சநீதிமன்றங்கள், உயர்நீதி மன்றங்கள், மாவட்ட நீதி மன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றது என்பது பற்றியும், நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச மையத்திற்கு நீங்களோ அல்லது உங்கள் வழக்குரைஞர்கள் மூலமாகவோ வேண்டுகோள் விடுக்கலாம்,
சமரச மையங்களில் நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது தீர்வுகளை ஊக்கப்படுத்தும். உறவுகள் மேம்பட வழிவகுக்கும், நான் என்றால் பகை, நாம் என்றால் உறவு உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தும் மற்றும் வாசித்து காட்டினர்,
இதில் வழக்குரைஞர்கள் மூர்த்தி, வஜ்ஜிரவேல், பெருமாள், பிரபாவதி, ஊத்தங்கரை ரெட்கிராஸ் தலைவர் தேவராசு, துணை தலைவர் ஆர்.கே.ராஜா, ஆசிரியர் கணேசன் மற்றும் நீதிமன்ற வழக்குரைஞர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply