வானொலியில் பத்து வருடங்களில் மிக அதிகமான சினிமா பிரபலங்களை நேர்காணல் செய்த பெருமை எனக்கு உண்டு : RJ Jeeva’s Exclusive Interview

Share Button

RJ Jeeva's Exclusive Interview

இன்றுடன் எனது வானொலியின் பயணம் 10 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மிகுந்த சந்தோஷமான தருணம். இது என் வாழ்வில் வர்ணஜாலங்கள் படைத்து, முக்கிய பங்கு வகித்து இன்று வரை என்னுடன் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நான் படித்தது இளநிலை கணினி அறிவியல். ஆனால், நான் படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் தொடர்பில்லாமல் போனாலும், எனக்கான ஒரு உறவு பாலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த வானொலிப் பயணம். ஊடகத்துறையில் தளபதிக்கு காரணமாக இருந்தது இந்த வானொலி தான்.

வானொலியின் மூலமாக, நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். பல தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டேன். வானொலி தான் எனக்கு தொலைக்காட்சிகளில் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. வானொலி தான் நான் குறும்படங்கள் இயக்க காரணமாக இருந்தது. வானொலிதான் பின்னணி இசையமைக்க எனக்கு காரணமாக இருந்தது. வானொலி மட்டும்தான் என் வருங்காலத்தை செதுக்குகிறது.

வெற்றிக்கு பின்னாடி போகாதே, புடிச்ச துறையைத் தேர்ந்தெடுத்துக்கோ, உன்னோட திறமையை வளத்துக்கோ வெற்றி உன்னைத் தேடி வரும்!

வானொலியில் பத்து வருடங்களில் மிக அதிகமான சினிமா பிரபலங்களை நேர்காணல் செய்த பெருமை எனக்குண்டு.

அதுமட்டுமல்லாமல், வானொலியில் பல்வேறு வகையான தூரங்களுக்கு சென்று பல்வேறு வகையான மக்களுடன் நேரடியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவமும் எனக்கு உண்டு.

இந்த அனுபவங்களுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் நிகழ்ச்சி பொறுப்பாளர்களுக்கும் நிகழ்ச்சி இயக்குனர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கு என் நெஞ்சில் குடியிருக்கும் என் இனிய நேயர்களுக்கும் என் குறைகளை சுட்டிக் காட்டி என்னை சிறப்பாக செதுக்கிய என் சக அறிவிப்பாளர்களுக்கும் இந்த இனிய நன்னாளில் எனது வானொலி தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வானொலி என்றும் அழியப் போவதில்லை. பல்வேறு தொழில்நுட்பங்களுடன் பல்வேறு புதிய முயற்சிகள் உடன் மீண்டும் உயிர்ப்பித்து உயிர்ப்பித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெறும் என்பதே ஆணித்தரமான உண்மை.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *