எஸ்ரோ அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நாளை சென்னையில் நடைபெறுகிறது. மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு!
சென்னை :-
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுக்கு உயர் கல்விக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது எஸ்ரோ அறக்கட்டளை.
அந்த வகையில், வரும் 13.02.2022 ஞாயிற்றுக்கிழமை (நாளை) அன்று மாலை 6.15 மணிக்கு சென்னையில் உள்ள (ஜெமினி மேம்பாலம் அருகில்) இராணி சீதை அரங்கத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது.
எஸ்ரோ நல உதவி அறக்கட்டளையின் 15 ஆண்டுகளாக சீரிய சேவைப் பயணத்தின் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு உயர் கல்விக்கு உதவி வழங்குதல் மற்றும் வளரும் அறிவியல் இதழின் 12 ஆண்டு கால சாதனை பயணத்தில் பங்கேற்பாளர்களுக்கு சிறப்பு செய்தல் ஆகிய நிகழ்ச்சி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு :
இந்த நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தன் முன்னாள் இயக்குனரும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் முதன்மை விருந்தினராக பங்கேற்கிறார்.
ஏ.வி.ஆர். அசோசியட் தலைவரும் எஸ்ரோ அறக்கட்டளையின் அறங்காவலருமான திரு.ஏ.வி.இராதாகிருஷ்ணன் வரவேற்பும் அறக்கட்டளையின் நிறுவனரும், வளரும் அறிவியல் இதழின் ஆசிரியருமான டாக்டர்.இ.கே.தி.சிவகுமார் விழா அறிமுகத்தினையும், வளரும் அறிவியல் சாதனைப் பயணம் குறித்து ஜெகநாத் சிறப்புரை வழங்குகிறார்.
சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் திரு.அர்ஜுன் ராஜ்குமார் அவர்கள் மற்றும் திரு.பி.குமரேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்கள் பாரக் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர்.அனுஷா ரவி மற்றும் சென்னை சிறப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் திரு.எஸ்.சரவணன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
விருந்தினர்கள் மூத்த விஞ்ஞானி டாக்டர்.என்.பரசுராமன் மற்றும் முன்னாள் துணைவேந்தர் டாக்டர்.ஆர்.ஜெகநாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி நிகழ்வில் உதவிகளை வழங்குகிறார்கள். இவ்விழாவில் டாக்டர்.வீ.மணிமொழி நன்றியுரை ஆற்றுகிறார்.
இந்த விழா தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply