ஊரக உள்ளாட்சி தேர்தல், ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்

Share Button

ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு

தமிழகத்தில் செங்கல்பட்டு, நெல்லை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சித்தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டங்களாக நடத்துவது என மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அதன்படி 6-ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது 14662 பதவியிடங்களுக்கு நடந்த இந்த தேர்தலில் 77.43% வாக்குப்பதிவு வாக்குகள் பதிவானது. பதிவு செய்யப்பட்ட வாய்க்குப்பெட்டிகள் 74 மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

இந்நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (09/10/2021) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 9 மாவட்டங்களுக்கு 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 62 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கும், 626 ஊராட்சியில் ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கும்,1324 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும் 10,329 கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும் என மொத்தமாக 12,341 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வாக்களிக்க 6,352 வாக்குச் சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. 34,65,724 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

காலை 9 மணி நிலவரம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.72% வாக்குகள் பதிவாகி உள்ளன என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. விழுப்புரம் 18.88%, கள்ளக்குறிச்சி 12.07%, காஞ்சீபுரம் 10.51%, செங்கல்பட்டு 6.85%, நெல்லை 6.59%, தென்காசி 11.75%, வேலூர் 8.05%, ராணிப்பேட்டை 7.45% மற்றும் திருப்பத்தூர் 5.22% வாக்குகள் பதிவாகி உள்ளன. 28 மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 13.35% வாக்குகள் பதிவாகி உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *