ஆதரவற்ற இரண்டு முதியவர்களுக்கு தனது காப்பகத்தில் அடைக்கலம் கொடுத்த நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை 

Share Button

அனுப்பர்பாளையம், திருப்பூர் :-

ஆதரவற்ற இரண்டு முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் இயங்கி வரும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு மனநலம் பாதித்தவர்கள், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள், ஆதரவற்ற பெரியோர்கள் என காக்கும் தெய்வமாக இருந்து அவர்களுக்கு முடித்திருத்தம் செய்து, புத்தாடைகள் அணிவித்து, உணவு வழங்கி தன்னுடைய குடும்ப உறவினர்களைப்போல அவர்களுக்கு சேவை செய்து வருகிறார் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையின் நிறுவனர் – நிர்வாக அறங்காவலர் ந.தெய்வராஜ் அவர்கள்.

ஆதரவற்று பரிதவித்த 2 முதியவர்களுக்கு அடைக்கலம் தந்ததுள்ளது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை. திருப்பூர் மாவட்டம், போத்தம்பாளையத்தில் புதியதாக கட்டிவரும் இல்லத்தில் ஆதரவற்ற 2 முதியவர்களுக்கும் ஆதரவு கரம் நீட்டியுள்ளார். தான் உருவாக்கி வரும் ஆதரவற்ற இல்லத்தில் அவர்களை தங்கவைத்து முதற்கட்டமாக பராமரித்து சேவை செய்ய துவங்கியுள்ளார்.

சமூக சேவகர் ந.தெய்வராஜ் அவர்கள் புதுவரவு இணைய செய்தி சேனலுக்கு தான் செய்யும் சேவையைக் குறித்து பகிர்ந்து கொண்டதிலிருது இனி…

கடந்த 20 ஆண்டுகாலமாக திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையானது ஆதரவற்ற சாலையோர மனநிலைபாதித்தோர், உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள், அரசு மருத்துவமனையில் உள்ள ஆதரவற்ற பல்வேறு நோய்வாய்ப்பட்டு உள்ளோர்களுக்கும், குழந்தைகள் காப்பகத்தில் உள்ளோர் என அந்தந்த இடங்களான திருப்பூர் மற்றும் பிற மாவட்டங்களுக்குச் சென்று பலாயிரம் பேருக்கும் தொடர்ந்து பல வழிகளில் உதவி செய்து வந்துள்ளதை இந்த நேரத்தில் நினைவு கூற விரும்புகிறோம்.

தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்கா, சேவூர் பகுதி போத்தம்பாளையம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாங்கப்பட்ட இடத்தில் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையின் பெரும் முயற்சியாக ஆதரவற்றோரின் மறுவாழ்வு இல்லக் கட்டிடப்பணியானது தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த சூழலில் இன்னும் கட்டிடப்பணியின் வேலைபாடுகள் முழுமையடையாமல் இதற்கான பொருளுதவியோ, நிதி உதவிகளோ கிடைக்கப்பெறாத நிலையில் பெரிதும் போராடி வரும் பட்சத்தில் தனது சொந்த வருமனத்தினை 75 சதவிதத்தை சேவைக்கென்றே ஒதுக்கியும் பல நல்ல உள்ளங்களின் சிறு சிறு உதவியை வைத்து இந்த மறுவாழ்வு இல்லத்தினை கட்டி வருகின்றோம் என்பதையும் புதுவரவு இணையதள செய்தி சேனல் வாயிலாக நினைவுபடுத்துகின்றோம்.

இந்த இக்காட்டான சூழலிலும் கூட தன் மனம் தளராத தன்னம்பிக்கையுடன் தனக்கென வாழ்வதை விட பிறருக்கென வாழ்வதையே லட்சியமக கொண்டு இயங்கி வரும் எங்களது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையானது இல்லக்கட்டிடப்பணியின் வேலை முடிக்கப்படாமல் இருக்கின்ற போதே திடிரென ஒரு வயதான தம்பதிகள் அடைக்கலம் வேண்டி கண்ணீர் சிந்திய அதிர்ச்சி சம்பவம்…

இளகிய மனம் கொண்டு அந்த வயதான தம்பதியரின் தகவல் கேட்க சென்றோம். இந்த முதியவர்களின் நிலை குறித்து டிஸ்ஸோ ஆனந்த் அவர்கள் மூலம் தெரியவரவே பின் அந்த தம்பதியரின் உண்மை நிலையைப் பற்றி அறிய எங்களது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை அமைப்பும், டிஸ்ஸோ ஆனந்த் அவர்களும் இணைந்து காரில் சென்று அந்த முதியவர்கள் இருக்கு இடமான மதுக்கரை மார்க்கட் கோயம்புத்தூரில் அவர் குடியிருக்கும் இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தோம்.

தனது பெயர் சங்கரபாண்டியன் வயது 67 என்றும் நான் பிறந்து வளர்ந்தது சிவகாசி எனவும் தகவல் தெரிவித்தார். எனக்கு சொந்தமான வீடு உசலம்பட்டி ஏழுமலை வழி மேலத்திருமாணிக்கம் பகுதியில் உள்ளது. முதல் மனைவியாக ராசாத்தி (எ) காளியம்மாள் என்பவரை 79 ல் திருமணம் முடித்ததில் ஒரு மகன், மகள் எனவும் வாழ்க்கை சிறப்பாக போனது.

திடீரென 89 ல் எனது மனைவி குழந்தைகளையும் என்னையும் விட்டு விட்டு காலமாயிட்டாங்க. பின் 2 ஆவதாக 90 ல் விமலாதேவி என்ற பெண்ணை எம் புதுப்பட்டியில் திருமணம் செய்தேன். அவர்களுக்கு 2 மகள்கள். அவர்களும் என்னை கைவிட்டு விட்டு வேறொரு வாழ்வை தேடியதால் நான் மனமுடைந்து விட்டேன் என்றார் அந்த முதியவர்.

நாளடைவில் கோவையில் 24 வருடங்களாக வசித்து வாட்ச்மேன் வேலையை 15 க்கும் மேற்பட்ட இடங்களில் பணிபுரிந்து வந்தேன். ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கை வேண்டாம் இனி இறந்திடலாம் என எண்ணி விசமருந்துடன் குடிமங்கலம் சென்ற போது அங்கு வந்த முகம் தெரியாத பெண்ணாக என் நிலவரத்தை சற்று நின்று வேடிக்கை பார்த்து வந்தவர் என்னருகில் வந்து உனக்கு என்னங்க ஆச்சு என கேட்டார்.

என் வாழ்வில் நடந்த இழப்புகளை ஈடுகொள்ள முடியாமல் இறக்கப்போறேன் என்று ஆதங்கத்தை இருவரும் பகிர்ந்தோம். உடன் அந்த இடத்தில் என் உயிரை காப்பாற்ற மறுவாழ்க்கைத் துணைவியாக அந்த பெண்ணை 3 ஆவதாக மனமுடிக்கவும் முடிவு செய்து நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.

கடைசி காலங்களில் நான் உனக்கும் நீ எனக்கும் என்ற ஆதரவாய் வாழ்ந்து சாவோம் என சரசு என்ற பெண்ணும் திருமணமாகத இவர் 45 வருடம் காரைக்குடியில் ஒருவீட்டில் வீட்டுவேலை செய்து வந்ததாகவும் திருமணமே வேண்டாம் என வாழ்ந்த எனக்கு இவரின் உயிரை காப்பாற்ற வேண்டியே இணைந்து வாழும் வாழ்வையும் இருவரும் ஒரே இடத்தில் இணைபிரியாத வாட்ச்மேனாகவும் வேலைபார்த்து வந்தனர்.

19 வருடங்களாக வாழ்ந்து வரும் நாங்கள் தற்போது எனது சொந்த வீட்டை ஏமாற்றி எனது மகன் மருமகள் பெயரில் எழுதி வைத்திட்டதாலும் அங்கு எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என விரட்டியத்ததால் நாங்கள் ஆதரவற்று வாழ்தா? சாவதா? என தெரியாமல் நிர்கதியா நிலையில் உள்ளோம்.

எங்களுக்கு ஆதரவளிக்க தங்களை எங்கள் பிள்ளைகளாக கருதி கெஞ்சுகின்றோம் ஐயா சாமி இனி கொஞ்ச காலம் வாழ்வோமோ என்னவோ இந்த வயசான காலத்தில நான் வேலை பார்க்கும் இடத்தில் திடீரென வந்த சூறாவெளி காற்று வந்து வீசியதால் பெரிய கம்பெனி இரும்பு கேட் மேல் விழுந்ததால் கால் முறிவு ஏற்பட்டு ஆப்பரேசன் செய்ததால தற்போது என்னால எந்தவேலையும் செய்ய இயலாத சூழ்நிலை உருவாகி, நானும் எனது துனைவியும் வருமானம் இல்லாததால் எந்த இடத்திலும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் கடந்த 4 மாதகாலமாக உணவின்றியும், இருக்க வீடு இல்லாமலும் பரிதவித்து வருகின்றோம் என வயதான தம்பதியிரின் கண்ணீர் வடித்த பெரும் சோகம் எங்களை எல்லாம் கண்கலங்க செய்தது என மன வேதனையுட தெரிவித்தார் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ந.தெய்வராஜ்.

இதுவரை பல்வேறு ஆதரவற்ற நபர்களை வெவ்வேறு மாற்றுக்காப்பகங்களில் சேர்த்து வந்த நாங்கள் இப்போது தவிர்க முடியாத இந்த வயதான தம்பதியர் சங்கரப்பாண்டியன், சரசு ஆகிய இருவரையும் தற்போது புதியதாக கட்டிவரும் ஆதரவற்றோர் மறுவாழ்வு இல்லக் கட்டிடம் கட்டி முடிக்கப்படாமலையே இந்த வயத தம்பதியரின் துயரைச் சம்பவம் அறிந்து எங்களது இல்லத்திலையே தற்போது சேர்த்து கொண்டு நிரந்தர மறுவாழ்வு அளிக்கவும் முடிவு செய்து நேற்று மாலை 4 மணி அளவில் டிஸ்ஸோ ஆனந்த் மூலமாக போத்தம்பாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் மறுவாழ்வு இல்லமான நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பதை இச்செய்தியின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சேவைப்பணியில் அறக்கட்டளையின் நிறுவனர் ந.தெய்வராஜ், உறுப்பினர்கள் சிவகாமி, சண்முகராஜ், செல்வராஜ், கோமதி மற்றும் டிஸ்ஸோ ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *