கனரக வாகனம் செல்லும் சாலையா, இல்லை மனிதனின் உயிரை பறிக்கும் சாலையா : பொது மக்கள் அச்சம்!

Share Button
திருப்பூர் மாவட்டம், அம்மாப்பாளையம் பகுதிகுட்பட்ட கோப்பால்டு மில் பஸ்ஸாடாபில் சாலை நடுவில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் குடிநீர் கசிவால் பாதாள குழி. உயிரைப் பறிக்கும் அபாயம்?
இந்த சாலை கனரக வாகனம் செல்லும் சாலையா? இல்லை மனிதனின் உயிரை பறிக்கும் சாலையா? அனைத்து பொது மக்களும் அச்சம்!
ஆபத்தை உணராத அதிகார்களுக்கு மத்தியில் சமூக உணர்வு கொண்ட ஒரு சில மனிதர்கள் பார்வையில் ஓர் கிளிக்… கிளிக்… ஆபத்தை தடுக்க சற்று டிவைடைரை வைத்து அதன் மேல் சிகப்பு துணி பறக்க விட்டும், சுற்றிலும் வாழை மரத்தை வைத்தும், டயர்களை வத்தும் இப்படி தடுப்பும்… பாதுகாப்பும் வைத்துள்ளது. இந்த இடத்தில் இதுவொரு ஆபத்தை உருவாக்கக்கூடிய இடமாகவும் உருவாகி வாகனங்கள் அந்த இடம் வந்த உடன் தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டு  பெரும் உயிர் சேதம் விளைவிக்கும் இடமாக கோபால்டு மில் பஸ்டாப் உருவாகி உள்ளது.
இங்குள்ள குடிநீர் கசிவாலும் இந்த இடம் சாலை நடுவில் நீர்  பெருக்கெடுத்து ஓடிவதால் சக பயணிகள்  நடந்து செல்பவர்கள் மீதும் டூவிலர் செல்பவர்கள் மீதும் மண் புழுதி கலந்த நீர் தெரிப்பதால் பலர் முகம் சுழித்தும், வேதனைப்பட்டு இந்த இடத்தில் உள்ளாக்கப்படுகிறார்கள்.
இவ்விடத்தையும் உடன் சரி செய்து குப்பைகளை அகற்றியும் குடிநீர் கேட்வாழ்வையும் மாற்றி பொது மக்களின் உயிரைக் காப்பாற்றிட வேண்டுகிறோம்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *