குடிநீர் குழாய் உடைந்து, சாக்கடை கால்வாயில் கலந்து பெருக்கெடுத்து ஓடுகிறது! குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா!

Share Button
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி அம்மாப்பாளையம், இராம கிருஷ்ண மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகாமையில் உள்ள பொது கட்டண கழிப்பிடத்தின் பக்கத்தில் குடிநீர் குழாய் உடைந்து வீனாவதை குடிநீர் வாரியத்தை சார்ந்த அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் குடிநீர் சாக்கடை கால்வாயில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருப்பூர் சாலையில் இருந்து அவினாசி செல்லும் பிரதான சாலையான இப்பகுதி அம்மாபாளையமான பகுதியில் பல முறை குடிநீர் குழாய் உடைந்து உடைந்து போவதை சரிசெய்தாலும் மறுபடியும் இப்பகுதி மட்டுமல்லாமல் திருப்பூர் புஸ்பா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அவினாசி வரை பல இடங்களில் குடிநீர் குழாய் விரிசல் ஏற்பட்டு ஆங்காங்கே பெருமளவில் கடல் நீர் போல 24 மணி நேரமும் ரோடுகளிலும், சாக்கடை கால்வாயிலும் யாருக்கும் பயன் படாமல் முற்றிலும் வீனா போகிறது குடிநீர்?
மனிதனின் தவிச்ச வாய்க்கு பல ஊர்களில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டும் வருகின்றனர். இதில் பாட்டிலில் அடைக்கப்பட்ட 1லிட்டர் மினரல் வாட்டர் என 20, ல் 25 வரையும், 20லிட்டர் கேன் தண்ணீர் 40 ல் இருந்து 45 வரையும் அதுவும் ரசாயனம் கலந்த நீரை குடிநீர் என நாம் தவறுதலாக பயன்படுத்தி நோய் நொடியை உருவாக்கி வருகிறோம் ஒருபுரம்…
இன்னொருபுரம் கிடைக்கின்ற குடிநீரைக்கூட முறையா சேமிக்க முடியாமல் அன்றாடம் வீனாக்கி வருவதையும் நாம் பார்த்து வருகிறோம்.
இதற்கு ஒரு தீர்வு கிடைக்காதா என மக்கள் தரப்பில் பெரிதும் கருகின்றனர். இதனால் மனிதன் சுத்தமான நீர் தேடி பல இடங்கள் அலைந்து திரிந்தாலும் கிடைக்க வேண்டிய தண்ணீர் மனிதர்களுக்கு கிடைக்காமல் இப்படி எவருக்கும் பயனளிக்காமல் வீனாகும் குடிநீர் குழாயின் உடைப்பை உடனுக்குடன் சரி செய்து குடிநீர் தட்டுப்பாட்டை கடைப்பிடிப்பார்களா அதிகாரிகள்.
அரசு துறை சார்பில் நம் மக்களிடையே விழிப்புணர்வு பதாகைகளை மட்டும் பல இடங்களில் கட்டி கண் துடைப்பு நாடகம் போல காட்டுகிறார்கள். அப்படி என்னதான் சொல்லுகிறது என்று பார்த்தால் குடிநீர் சிக்கனம், மின்சார சிக்கனம், இருவருக்கு ஒரு குழந்தை மட்டுமே, தூய்மை பாரதம், சிறுதுளி பெருவெள்ளம், இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு என இப்படி எண்ணற்ற அரசு விழிப்புணர்வு வெற்று பதாகைகளாகவே தான் இருக்கின்றது.
இதைத் தாண்டி நம் மனிதரின் உயிர்நாடி என்பது  குடிநீர்தான் என்பதை ஏன் உணரவில்லை? அப்படி உயர்ந்து இருந்தால் இந்நேரம் குடிநீரை முறையா சேமித்து இருந்தாலே தமிழகமெங்கும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் உருவாகிருக்கக் கூடுமல்லவா. இதை ஒரு கணம் சிந்தித்து செயல் பட அதிகாரி முனைப்பு காட்டினால் இதற்கப்பரமாவது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படாமலிருக்க குடிநீர் வாரிய அதிகாரிகளும், அந்தந்த பகுதி பொறுப்பின்மை உடைய சக ஊழியர்களும் ஆங்காங்கே பழுதான குடிநீர் குழாயை உடனடி சரி செய்திடவும் பிறகு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படாமல் இருக்க சாலைகளில் செல்லும் கனரக வாகனங்களை கண்கானித்தும் அதற்கான மாற்று சாலைகளில் கனரக வாகனங்களை அனுப்பி உதவிடவும்.
குடிநீர் வீனாவதை உடனே சரி செய்திடவும், மனிதனின் குடிநீர் பிரச்சனை உருவாகாமல் தீர்த்துடுவீர் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *