கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதிகள் இருக்கும் இடங்கள்

Share Button
கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதிகள் இருக்கும் இடங்கள் :
கோரக்கரின் ஜீவசமாதி தரிசனம், கோரக்கச் சித்தர் இடங்கள், கோரக்கர் பொய்கை நல்லூரில் சமாதி ஆகிய காலம் கி.பி. 1233 ஆம் ஆண்டாகும்.
அவரது ஜீவ சமாதிகள் அமைந்துள்ள இடங்கள் வருமாறு :-
1. பொதிய மலை
2. ஆனை மலை
3. கோரக் நாத்திடல் (மானாமதுரை அருகே)
4. வடக்கு பொய்கை நல்லூர்
5. முகாசபரூர்
6. கோரக்கர் குண்டா (சதுரகிரி)
7. பத்மாசுரன் மலை
8. கோரக்பூர் (உத்தரபிரதேசம்)
இவற்றில் வடக்கு பொய்கை நல்லூர் மற்றும் முகாசபரூர் ஜீவசமாதிகள் பற்றி கோரக்கரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பொதிய மலை, ஆனைமலை சமாதிகள் பற்றி அறிய முடியவில்லை. கோரக்நாத்திடல் மானாமதுரை அருகே வந்தமனூர் என்ற இடத்தில் உள்ளது. அங்குள்ள கோரக்கர் சமாதிக்கு சித்ரா பவுர்ணமியன்று பொங்கலிட்டு படையல் செய்து வழிபட்டு வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட கோரக்நாத் மந்திர் என்ற சமாதி கோவில் அமைந்துள்ளது.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *