பஞ்சாப் :-
பஞ்சாபில் முதல் தலித் முதல்வர் சர்ஜித் சிங் சன்னி
முதன் முறையாக பஞ்சாபில் சர்ஜித் சிங் சன்னி அவர்கள் தலித் சமூகத்திலிருந்து பதவி ஏற்கிறார். காங்கிரஸ் சரியான வழியில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது. தலித் மக்களை தமது அடித்தளமாகக் கொண்ட காங்கிரசின் செல்வாக்கை சீரழித்ததில் இந்துத்துவ சிலிப்பர் செல்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
தலித்துகளை தலையெடுக்க விடாமல் தடுத்ததில் அவர்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. காலம் கடந்து காங்கிரஸ் உணர்ந்த காரணத்தினால் தற்போது தலித்துகளை அரவணைக்கத் தொடங்கியுள்ளதின் வெளிப்பாடு இது.
காங்கிரஸ் இனி மீளும்
அதிகாரம் என்பது வெறும் அடையாளமல்ல… அது சமூக நீதியினை நிலைநிறுத்தும் களம். பஞ்சாப் அதை சாதித்திருக்கிறது. வாழ்த்துக்கள் பஞ்சாப். வாழ்த்துக்கள் காங்கிரஸ். வாழ்த்துக்கள் ராகுல் காந்தி.
– கௌதம சன்னா
Leave a Reply