திருப்பூர் மாநகர பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்தது
திருப்பூர் :-
திருப்பூர் மாநகர பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்தது…!
திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் பகுதி அவினாசி சாலை, வேலம்பாளையம் சாலை வழியா அளவுக்கு அதிகமாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
திருப்பூரில் கன மழை : மகிழ்ச்சியும், அதிர்ச்சியும்
நேற்று (23-9-2021) மாலை 4 மணி சுமார்க்கு திடீரென மழையோ மழை பின்னி வெளுத்தது. இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களும், பொதுமக்களும் கடந்து செல்ல முடியாமல் சிக்கித்தவித்தது ஒருபுரம். இன்னொருபுரம் அருகில் உள்ள சாக்கடைக் கால்வாய் நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரானாது அருகில் உள்ள கடைக்குள் பாய்ந்தும், வேலம்பாளையம் சாலையில் அனுப்பர்பாளையம் புதூர் சிக்னல் வழியே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் நுழைந்ததால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியும் உள்ளார்கள்.
பெடலெடுத்த கன மழை
வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் அவதி. டூவிலர், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மழைநீரில் மூழ்கிச் செல்லும் அசாதார சூழலும் இன்று நிலவியது. மாலை நேரம் பள்ளி கல்லூரிகளின் மாணவ மாணவியர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் பரிதவிப்புக்கும் ஆளாகினர்.
அனுப்பர்பாளையம் சாலை நிலவரம்
இந்த அனுப்பர்பாளையம் புதூர் சிகனல் பகுதியானது ஒவ்வொரு முறையும் மழைவரும்போதெல்லாம் மிகவும் அச்சுறுத்தலாகவே தான் இருக்கின்றது என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கடை வைத்திருப்போர், குடியிருப்பு வாசிகள் என பல வருடங்களாக இந்த இடத்தில் மழைநீர் தேங்கி சாக்கடை கழிவு நீரும் கலந்து இந்த தாழ்வான இடத்தில் இருந்து உடன் செல்ல இயலாத பகுதியாகவும் உள்ளது என மக்கள் பெரும்வேதனை..?
என்னா மழை சாமீ
இதற்கு ஒரு தீர்வே கிடையாதா? எனவும் மக்கள் பெரிதும் நினைத்து வேதனைப்பட்டு வருகிறார்கள். இங்கே உள்ள சாலைப்பகுதியானது நான்கு பகுதிகளாக பிரியும் ரோடு, மற்றும் சாக்கடையும் பல பகுதிகளில் இருந்து வந்து ஒன்றாக இணையும் சந்திப்பு பகுதியாக உள்ள இடம் என்பதால் தெற்கே பெரியார் காலனியில் இருந்து வடக்கே நோக்கி வர உள்ள மழைநீரானதும், வேலம்பாளையம் சாலையின் மேற்குப்பகுதியில் இருந்து கிழக்குப்பகுதியை நோக்கி வரும் மழைநீரானதும், அனுப்பர்பாளையம் வடக்குப்பகுதியில் இருந்து வரும் மழைநீரானது எல்லாம் ஒரே இடத்தில் சங்கமித்து பின் கூட்டுறவு சொசைட்டி, தொழில் மையத்தை ஒட்டியுள்ள குறுகிய பாலத்தின் அடியில் தான் மழைநீரானது செல்லவேண்டிய பகுதி என்பதாலும் குறைவான மழைநீர் பெய்தாலும் இந்த சந்திப்பில் இருந்து அவ்வளவு எளிதாக மழைநீரானதோ சாக்கடைகால்வாயின் நீரானதோ அல்லது அளவுக்கு அதிகமான மழை வந்தாலோ பல பகுதிகளில் நிரம்பி வழிந்த மழை நீரினாலோ இந்த இடமானது பல நெருக்கடியான சூழலையுமே தொடர்ந்து நிலவுகிறது. இந்த ஆபத்தான கட்டத்திலிருந்து எப்போது தான் நல்ல தீர்வு கிடைக்கும் என அனைவரின் நீண்டகால கோரிக்கையாகவே மக்களின் மனதில் உள்ளது.
தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதற்கான தீர்வை அரசு தரப்பில் அதிகாரிகள் இவ்விடத்தை ஆய்வு செய்து நடைமுறையில் ஏற்படும் அசாதார சூழலையும் எதிர்கால சூழலையும் கருத்தில் கொண்டு இப்பகுதி பொது மக்களின் வாழ்வு நிலையை காப்பாற்றிடும்வகையில் சாலைகளின் தாழ்வு நிலை, பாலத்தின் விரிவு நிலை, சாக்கடை கால்வாயின் விசித்திருப்பு நிலை என அருகில் வசித்துவரும் மக்களின் குடியிருப்பு பற்றியும் ஆராய்ந்து தற்போது இவ்விடத்தினை அதிகாரிகள் நேரடி கலாய்வு மேற்கொண்டும் இப்பகுதி பொதுமக்களின் நீண்டகால தீர்வில்லாத கோரிக்கையை தற்போதுள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் நேரடிபார்வையிட்டு இத்திட்டத்தை நிறைவேற்றித் தர அனுப்பர்பாளையம் புதூர், அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் என அனைத்து தரப்பின் பொதுமக்களின் வாயிலாகவும், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக வைக்கின்றோம்.
பொதுமக்களில் நானும் ஒரு சமூக ஆர்வலரான…
ந.தெய்வராஜ், சமூக ஆர்வலர்,
அனுப்பர்பாளையம், திருப்பூர்.
Leave a Reply