பாஜ தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் போட்டியிடும் பாஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் 12.30 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி சென்று எட்டையாபுரம் ரோட்டில் தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
பின்னர் சிவகங்கைக்கு சென்று பாஜ வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவு திரட்டுகிறார். அதை முடித்துக் கொண்டு மாலை 4.10 மணியளவில் மதுரையிலும், அதைத்தொடர்ந்து அங்கிருந்து கோவை சென்று பாஜ கூட்டணி பிரசாரம் செய்கிறார்.












Leave a Reply