மதுரை தொகுதியினை விட்டுக்கொடுத்த திமுக அதிருப்தியில் தொண்டர்கள்

Share Button
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்து,
எந்தெந்த தொகுதிகள் என ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்
குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, திமுக தலைமையிலான கூட்டணியில் மதுரை, கோவை மக்களவை தொகுதிகளில் மார்க்சிஸ்ட் போட்டியிடும். இது நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயகம், அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றை பாதுகாக்கும் தேர்தல்” என்று கூறினார். இதன்மூலம் மதுரை தொகுதியில் திமுக தனது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது தெரியவந்துள்ளது.
இதுவரை, மதுரையில் ஒருமுறை மட்டுமே திமுக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இம்முறை மீண்டும் களம் காண வேண்டும் என்று தலைமையிடம் திமுக தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி விட்டதாக கூறப்படுவதையடுத்து திமுக தொண்டர்கள் தற்போது அதிருப்தியில் உள்ளார்கள்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *