பொள்ளாச்சி பலாத்கார வழக்கு சிபிஐ க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைச் செய்யப் பட்டு அது தொடர்பான ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கப் பட்ட சம்பவம் தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது .
மாணவி மட்டுமல்லாமல் மேலும் ஏராளமான பெண்களை முகநூல் வாயிலாக பழகி பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை எடுத்ததாக திருநாவுக்கரசு, வசந்த குமார் ,சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோர் போலிசாரால் கைது செய்யப் பட்டனர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை அதிமுக பிரமுகர் நாகர்ராஜன் மிரட்டியதாக கூறவே அவரும் காவல் துறையினரால் கைதுச் செய்யப்பட்டார், இத்துடன் அவரை அதிமுகவிலிருந்து நீக்கி அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே கைது செய்யப் பட்ட நால்வரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறை வைப்பு என மாவட்ட ஆட்சியர் ராஜாமணி நேற்று உத்தரவிட்டார்.
மேலும் இவ்வழக்கை சிபிசிஐடி போலிஸ் விசாரணைக்கு மாற்றி ஆணை பிறப்பித்தார் டிஜிபி. டி.கே. ராஜேந்திரன். உடனடியாக சிபிசிஐடி குழுவும் விசாரணயை துவங்கினர், சிபிசிஐடி கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் விசாரணை துவங்கப்பட்ட நிலையில் இவ்வழக்கை சிபிஐ க்கு மாற்ற தமிழக அரசு அதிரடியாக முடிவெடுத்தது.
எனவே மத்திய அரசுக்கு, தமிழக அரசு சார்பில் கோரிக்கை அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றவுடன் வழக்கு சிபிசிஐடி மிருந்து சிபிஐக்கு மாற்றலாம் எனவும் அதுவரை சிபிசிஐடி போலிசார் விசாரணையை தொடரட்டும் என்று அறிவிக்கப் பட்டது.
இந்நிலையில் பல கட்சி பிரமுகர்கள் தங்களது கோபங்களை பல ஊடகங்கள் மூலமும், முகநூல் மற்றும் ட்விட்டர் மூலமும் வெளியிட்டுள்ளனர். மேலும் கொடூரத்தை எதிர்த்து பொள்ளாச்சியில் போராட்டம் நடத்திய திமுக மகளிரணி செயலாளரான கனிமொழி கொண்ட குழுவினரை போலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசனின் தாய் தனது மகனுக்கு ஜாமீன் கேட்டு பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மணுதாக்கல் செய்தார், ஆனால் அந்த மணு நீதி மன்றத்தால் தள்ளுபடிச் செய்யப்பட்டது.
Leave a Reply