சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் ஸ்ரீ VDS ஜெயின் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றனர்
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 25.01.2019 மற்றும் 26.01.2019 அன்று மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. போட்டியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ VDS ஜெயின் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றனர்
ஆர்.ஹேமலதா – 18 வயதிற்குட்பட்ட பிரிவில் 3000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இ.ரம்யா என்ற மாணவி அதே பிரிவில் 3000 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
வெற்றிப் பெற்ற மாணவிகளை பாராட்டி பள்ளியின் தாளாளர் திரு.வி.பவன்குமார் மற்றும் பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினர்கள் திரு.வி.ஜெய்சந்த், செயலாளர் திரு.டி.எஸ்.ராஜ்குமார், திரு.எஸ்.ராஜேந்திரகுமார், திரு.டி.வி.சுதர்ஸன், பொருளாளர் திரு.டி.வசந்த்குமார், ஆங்கில வழிச் செயலாளர் திரு.ஸ்ரீஹன்ஸ்குமார், தமிழ்வழிச் செயலாளர் திரு.வி.சுரேந்திரகுமார், திரு.டி.வி.நரேந்திரகுமார் மற்றும் முதுநிலை ஆசிரியர் திரு.எம்.இராமகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் திரு.என்.ஆர்.மணி, உடற்கல்வி ஆசிரியர் திரு.எம்.இரமேஷ், திரு.ஜே.வேதமாணிக்கம், திரு.ர.பிரபாகரன், திரு.வே.சிவகிருஷ்ணன் மற்றும் இருபால் ஆசிரிய பெருமக்கள் வெற்றி பெற்ற மாணவிகளை வாழ்த்தி உடனிருந்து பாராட்டினார்கள்.
Leave a Reply