கிருஷ்ணகிரி அருகே கந்திகுப்பம் கிராமத்தில் நடைப்பெற்ற ஊராட்சி சபா கூட்டத்தின் போது மோடியின் பினாமி ஆட்சியின் நிறுத்தப்பட்ட நூறு நாள் வேலை மற்றும் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட நலத்திடங்கள் அனைத்தும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும் உரிய காலத்தில் வழங்கப்படும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கிராம மக்களுக்கு உறுதி அளித்தனர்.
கிருஷ்ணகிரி சிழக்கு மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்கு கந்திகுப்பம், மாதேப்பள்ளி ஒப்பதவாடி ஆகிய மூன்று ஊராட்சிகளில் திமுக. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணையின்படி ஊராட்சி கிராம சபா கூட்டம் நடத்தப்பட்டது.
பர்கூர் ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராசன் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தின் போது கந்திகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்த்த ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டனர்.
அப்போது ஏழை கிராம மக்கள் பயன் பெறும் வகையில் கங்கிரஸ் ஆட்சி கலத்தில் கொண்டு வரப்பட்ட நூறு நாள் திட்டத்தினை மோடியின் அரசு படிப்படியாக நிறுத்தப்பட்டதை மீண்டும் கொண்டு வர வேண்டும்,
மேலும் கலைஞர் ஆட்சியின் போது ஏழை, எளிய முதியவர்கள் வரை பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட முதியோர் உதவித் தொகையும் கிடைக்க வழி செய்ய வேண்டும்,
கிராமங்களில் பட்டப்படிப்புகள் முடித்து வேலை வாய்ப்புகள் இன்றி அவதிப்படும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும், அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படடு உள்ளது ஆகையால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் உழங்க வேண்டும்,
குறிப்பாக கந்திகுப்பம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் அந்த இடத்தில் மேம்பாலம் கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினார்கள்
இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மத்தியில் உரை ஆற்றிய கிருஷ்ணகிரி சட்ட சட்ட மன்ற திமுக உறுப்பினர் செங்குட்டுவன், கூடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி ஆகியோர் திமுக ஆட்சி அமைத்தவுடன் மத்திய, மாநில அரசுகள் நிறுத்திய அணைத்து நலத்திட்ட உதவிகள் மட்டுமின்றி, நிறுத்தப்பட்ட வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி 100 நாள் வேலை வாய்ப்பு, முதியோர் உவித்தொகை ஆகியவை மீண்டும் கிடைக்கும் என்று உறுதி அளித்தார்
மேலும் இந்த கூட்டத்தின் போது கந்திகுப்பம் திமுக ஊராட்சி செயலாளர் மாணிக்கம், திமுக மாவட்ட பிரதிநிதி நாகராஜ் உள்ளிட்ட ஏராளமாளோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply