24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மாலத்தீவு பகுதியில் காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகமான புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரிய அளவில் மழை இருக்காது. இதனை தொடர்ந்து சென்னை மேக மூட்டத்துடன் காணப்படும். நகர்ப்புறங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் இயக்குனர் கூறியுள்ளார்.
Leave a Reply