சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொண்டால் திறன்பட செயலாற்ற முடியும்: ரயில்வே காவலர்களுக்கு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் அறிவுரை

Share Button

ரயில்வே காவல்துறையினர் சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொண்டால் திறன்பட செயலாற்ற முடியும் என ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். ரயில்வே காவல்துறை மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து சென்னை அயனாவரத்தில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரயில்வே காவல்படையின் சென்னை மண்டல முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன் மற்றும் பல ரயில்வே துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், பணியின்போது கிடைத்த பல சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் பல்வேறு அறிவுரைகளையும் ரயில்வே காவலர்களுக்கு வழங்கினார். சட்ட நணுக்கங்களை தெரிந்து கொண்டால் நேர்மையாகவும், திறமை வாய்ந்தவர்களாகவும் செயல்பட முடியும் என்று தெரிவித்தார்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *