தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!

Share Button

தூத்துக்குடி :-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம். இக்கூட்டத்தில் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆணைப்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தூத்துக்குடி மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் சோலையப்பராஜா, மாநில துணைத்தலைவர் வெற்றிராஜன், மாநில இணைச்செயலாளர் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகளை மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினார். அதில், சோலையப்பராஜா கௌரவ தலைவராகவும், வெற்றிராஜன் மாவட்ட தலைவராகவும், பீட்டர் மாவட்ட செயலாளராகவும், மாரிமுத்து மாவட்ட பொருளாளராகவும், அந்தோணி இன்பராஜ் செய்திதொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

கூட்டத்தில், வரும் மே 5ம் தேதி வணிகர் தினவிழாவில் திருவாரூரில் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவேண்டும்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட புதிய அலுவலக திறப்பு விழாவினை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் சிறப்பாக நடத்திட வேண்டும்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட சங்க வளர்ச்சிக்கு அனைத்து கிளைச்சங்கங்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நினைவேற்றப்பட்டது.

விழாவில், வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புராஜ், வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க செயலாளர் செந்தில்குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் மகேஸ்வரன், மாவட்ட முன்னாள் பொருளாளர் ஆனந்த் பொன்ராஜ், துணைத்தலைவர் மாதவன், தூத்துக்குடி நகர பழைய இரும்பு மற்றும் மோட்டார் பார்ட்ஸ் வியாபாரிகள் சங்க செயலாளர்கள் செல்லத்துரை, பிரையன்ட்நகர் வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் மணிகண்டன், பிக்அப் தனபாலன், தமிழ்ச்சாலை மேற்கு பகுதி வியாபாரிகள் நலச்சங்கம் புதுக்குடி-3வது மைல் செயலாளர் கே.மோகன்ராம், பொருளாளர் பொன்னம்பலம், துணைத்தலைவர் பெத்துபாண்டியன், புதுக்கோட்டை அனைத்து முன்னேற்றசங்க செயலாளர்கள் கே.பெரியசாமி, ஜி.முருகன், துணைத்தலைவர் பி.என்.பெரியசாமி, அபிநயா ஜுவல்லர்ஸ் கிருஷ்ணமூர்த்தி, சேதுபாதை ரோடு வியாபாரிகள் நலச்சங்கம் பொதுச்செயலாளர் அழகுமுத்து, செயலாளர் பழனி, பிரையன்ட்நகர்-சிதம்பரநகர் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ஞானசெல்வம், மாவட்ட செய்திதொடர்பாளர் அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட மருந்து விற்பனை சங்க தலைவர் முனியசாமி, கோவில்பட்டி மாவட்ட பொருளாளர் மாரியப்பன், இளைஞரணி அமைப்பாளர் எஸ்.எஸ்.முத்து, சிவசந்திரன், சரமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *