புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க 16ஆம் ஆண்டு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்பு

Share Button

புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க 16ஆம் ஆண்டு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார்.

மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்று வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 16ஆம் ஆண்டு விழா ஐம்பெருவிழாவாக நடைபெற்றது.

விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச்செயலாளரும், அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவருமான பீட்டர் தலைமை வகித்தார்.

இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில கூடுதல் செயலாளர் காளிதாசன், மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், தூத்துக்குடி மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மண்டலத்தலைவர் வைகுண்டராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சோலையப்பராஜா, தெற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் பி.என்.பெரியசாமி வரவேற்று பேசினார். சங்க பொருளாளர் ராபின்சன் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு பேரமைப்பின் கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து புதிதாக கட்டப்படும் புதுக்கோட்டை சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், புதுக்கோட்டை பஜார் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை துவக்கிவைத்தார்.

மேலும், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், நலிந்த வியாபாரிகளுக்கு தையல் மிஷின், கிரைண்டர், அயர்ன்பாக்ஸ், துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை, 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

விழாவில், மாநில துணைத் தலைவர் வெற்றிராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், வடக்கு மாவட்ட பொருளாளர் ஆனந்த் பொன்ராஜ், வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புராஜ், செய்திதொடர்பாளர் அந்தோணி இன்பராஜ், கோவில்பட்டி மாவட்ட பொருளாளர் மாரியப்பன், தெற்கு மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் அருணாச்சலம், கோவில்பட்டி செயலாளர் ரவி மாணிக்கம், ரத்னா ஏனென்சிஸ் அரிமா.தர்மராஜ், லட்சுமி ஜுவல்லர்ஸ் கணேசன், ஜேபிஆர் பில்டர்ஸ் பாரத், அன்னை எலக்ட்ரிகல்ஸ் சக்திகுமார், வி.பி.எம். ஹாலோபிளாக் பழனி மகாரான், வி.எஸ்.ஏ. பில்டர்ஸ் சுப்பிரமணியன், அஜித்குமார், ராஜரத்தினம் ஸ்டோர்ஸ் சுரேஷ், மருத்துவர்கள் வாசன், ஜெயலட்சுமி, வள்ளி (எ) லட்சுமி, ஸ்ரீமுத்து சரஸ்வதி சூப்பர் மார்க்கெட் ராஜாமணி, பி.எம்.மோட்டார்ஸ் மாரியப்பன், ஜானகி பேப்பர் ஸ்டோர்ஸ் தாமோதரன், தூத்துக்குடி மாவட்ட மருந்து விற்பனை சங்க தலைவர் முனியசாமி, மெர்கண்டைல் வங்கி மேலாளர் வினோத், கனரா வங்கி மேலாளர் ஸ்ரீதர்ராஜா, சத்யா மஹால் பூலோகபாண்டியன், மேலகூட்டுடன்காடு சங்க தலைவர் ஆதிநாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி ரவிதாகூர் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.

நிறைவாக சங்க செயலாளர் ஜி.முருகன் நன்றியுரையாற்றினார்.
விழாவில், துணைத்தலைவர் சர்க்கரை, செயலாளர் கே.பெரியசாமி, இளைஞரணி அமைப்பாளர்கள் டேவிட்குமரன், சக்திலிங்கம், ஜெயக்குமார், துணைச்செயலாளர்கள் வியாகப்பன், லெனின், ராஜன், கருப்பசாமி, சந்திரசேகரன், இணைச்செயலாளர்கள் சக்திகுமார், ராபின்சன்குருசோ, சரவணன், பழனிமகாராஜன், குமரேசன், இளைஞரணி பொறுப்பாளர்கள் முத்துகுமார், பொன்முருகன், சங்கர் நாராயணன், ராஜன், சிங்கராயர், செல்லப்பா, சரவணன், கௌரவ ஆலோசகர்கள் செந்தில்ஆறுமுகம், எல்.சுப்பையா, வேலாயுதம், ராமச்சந்திரன், வி.அருள்ராஜ், எஸ்.முத்துகுமார், சங்கர் (எ) அம்பி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *