நெமிலி ஊராட்சி ஒன்றியம் மாங்காட்டுச்சேரி ஊராட்சி ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுபாலம் திறப்பு!
நெமிலி, இராணிப்பேட்டை மாவட்டம் :-
நெமிலி ஊராட்சி ஒன்றியம் மாங்காட்டுச்சேரி ஊராட்சி ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுபாலம் திறப்பு!
மாங்காட்டுச்சேரி ஊராட்சி, கடம்பநல்லூர் கிராமத்திற்கு செல்லும் வழியில், பழுதடைந்த பாலத்தை பொதுமக்கள் சீரமைத்துதர கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, 2021-2022 ஆம் நிதியாண்டிற்கான 15வது நிதிக்குழு மான்யத்திலிருந்து ரூ.8,70,000/- மதிப்பீட்டில் புதியதாக சிறுபாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
தற்போது அதற்கான பணி முழுமையாக முடிக்கப்பட்டு, ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி. வரலட்சுமி அசோக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு சிறுபாலத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திரு.அசோக்குமார், ஒப்பந்ததாரர் பாபு, ஒன்றிய பொருளாளர் சங்கர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.












Leave a Reply