கடந்த 2015ம் ஆண்டு சுமார் 1.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு, அமெரிக்காவிடம் இருந்து 15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களை வாங்கியது. அதில் தற்போது, நான்கு ஹெலிகாப்டர்கள் இந்தியா வந்துள்ளது.
பன்முக திறமை கொண்ட இந்த லிப்ட் ஹெலிகாப்டர்கள் சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லை பிரச்சினைகளின் போது இந்திய விமானப் படைகளின் பலத்தை அதிகரிக்க பயன்படும் என கூறப்படும் நிலையில், சண்டிகரின் விமானப்படை நிலையம் விங் 12 விமான நிலையத்தில் இன்று இந்த முதல் நான்கு லிப்ட் ஹெலிகாப்டர்களை விமானப்படைத் தளபதி மார்சல் பி.எஸ். தானோ அறிமுகம் செய்து வைத்தார்.
இது குறித்து பேசிய தளபதி, இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்கள் இந்தியாவின் குறிப்பிட்ட மேம்பாடுகளை கொண்டு வாங்கப்பட்டுள்ளது. இது நம் தேசிய சொத்து என கூறினார்.
இந்த லிப்ட் ஹெலிகாப்டர்கள் சுமார் 23,000 கிலோ எடையினை தாங்கி மணிக்கு சுமார் 302 கிமீ வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள உலக நாடுகளில் இந்தியா தற்போது 19வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Leave a Reply